» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கணித்தமிழ் திருவிழா

வியாழன் 12, ஜனவரி 2023 4:50:33 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை சார்பாக "கணித்தமிழ் திருவிழா” நடைபெற்றது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரியின் கணித்தமிழ் பேரவை சார்பாக "கணித்தமிழ் திருவிழா”  நடைபெற்றது. தமிழ் இணையகல்விக்கழகம், சென்னை மற்றும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவன அளவில் கணித்தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

முன்னதாக மாணவர்கள் கணித்தமிழ் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஊக்குவிக்கும் வகையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலையாசிரியர் (பணி நிறைவு) பே. சங்கரலிங்கம், பங்கேற்று கணித்தமிழ் முக்கியத்துவத்தைப் பற்றியும் இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய அளவில் கணித்தமிழ் எவ்வாறு உயர்ந்து உள்ளது என்பதை பற்றியும் எடுத்துரைத்து கணித்தமிழ் வளர்ச்சி மாணக்கர் இளைஞரிடம் உள்ளது என்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவித்தார். 

கல்லூரியின் முதல்வர் ப. அகிலன் நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கினார். அவர்தம் தலைமையுரையில் மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்றும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் எடுத்துரைத்தார். 

நிகழ்ச்சியில் பேராசிரியர்  மற்றும் தலைவர் ந.வ. சுஜாத்குமார், வாழ்த்துரை வழங்கி பல்வேறு நாடுகளில் கணித்தமிழின் வளர்ச்சியையும் எதிர்கால கணித்தமிழின் தேவைகளையும் குறித்து பேசினார். பேராசிரியர் நீ. நீதிச்செல்வன், மநிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கி தமிழின் பெருமையையும் கணித்தமிழ் பேரவை முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துரைத்தார். முன்னதாக உதவிப் பேராசிரியர்  கோ. அருள் ஓளி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக உதவிப் பேராசிரியர் மணிமேகலை நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory