» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
டிஎம்எம் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!
வியாழன் 12, ஜனவரி 2023 3:50:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் டிஎம்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கல்லூரியின் இயக்குனர் ப.கோபால் குளத்தூர் பத்திரகாளி, அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் ல. தாமஸ் முன்னிலையில் குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் பேரணியைத் துவங்கி வைத்தார். குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் இருதயராஜ் மற்றும் குளத்தூர் காவலர் இராமலிங்கம் சிறப்புடன் நடத்த உதவினர். மேலும் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி கெங்குமணி கலந்து கொண்டார்.
இந்த விழிப்புணர்வு பேரணி குளத்தூர் காவல் நிலையம் முன்பு ஆரம்பித்து குளத்தூர் பஸ் பேருந்து நிலையம் சென்று முடிவடைந்தது. பேரணியில் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பேரணி ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் பா.வெர்ஜின் பிரதீபா செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


