» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வேம்பார் டிஎன்டிடிஏ பள்ளி ஆண்டு விழா
செவ்வாய் 10, ஜனவரி 2023 9:04:08 PM (IST)

விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பாரில் டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பாரில் அமைந்துள்ள டிஎன்டிடிஏ துவக்கப் பள்ளி ஆண்டு விழா வேம்பார் சேகரகுரு பிரகாஷ் ஞானதுரை, சிஎஸ்ஐ கிராமத் தலைவர் சத்யநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கிராம செயலாளர் ஜான் ஜேம்ஸ் பொருளாளர் நடராஜன் திருமண்டல உறுப்பினர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கிருபைமணி வரவேற்றார்.
விழாவின் சிறப்பு நிகழ்வாக இராமநாதபுரம் மாவட்டம் நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஸ்து ஞான வள்ளுவன் (வேம்பாரை சார்ந்தவர்) தாம் கல்வி பயின்ற பள்ளி என்ற நினைவில் ஒவ்வொரு ஆண்டும் 10ம், 12ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்க்கும் திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு கல்விப் பரிசு வழங்கிவருகிறார்.
மாற்றுத்திறனாளியான ஆசிரியர் வள்ளுவன் அதனை ஒரு பொருட்டாகவே கருதாமல் தாம் பணியாற்றும் பள்ளிகளில் பல்வேறு புதுமைகளை கையாண்டு பெற்றோர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றவர். இந்த ஆண்டு 10ம் வகுப்பில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஏஞ்சலின் அபிதாபாக்கியசீலி ஆகியோருக்கு கல்விப் பரிசாக முறையே 3 ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார்.
12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற இன்பகிரேனாவுக்கும் சோலை செல்வம் ஆகியோர் முறையே 3 ஆயிரம் 2 ஆயிரம் பரிசு பெற்றனர். திறனாய்வுத் தேர்வில் வென்ற ஜெப பிரசன்னா சீதலா தேவி தமிழரசன் மரியஜோதி ஆகியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் கல்விப் பரிசாக பெற்றுக் கொண்டனர். இது தவிர ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம் வேட்டி தின வாரமாக கொண்டாடுவதையொட்டி வேட்டியுடன் பொது மக்களுக்கு பாரம்பரியத்தின் மகிமையை உணர்த்தினார். முன்னதாக மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழா நிறைவில் பள்ளி ஆசிரியை ஜெபக்கனி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


