» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக்கில் ஒற்றுமை விழா
திங்கள் 19, டிசம்பர் 2022 12:25:43 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 2009 முதல் 2012 வரை படித்த மாணவர்களின் "10 வருட ஒற்றுமையைக் கொண்டாடும் விதமாக"(celebrating 10 years of togetherness), முன்னாள் மாணவர்களின் கூடுகை இன்று 18.12.2022 காலை கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது
விழாவில் கல்லூரி முதல்வர் எஸ் ஆவுடையப்பன் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார், துறை தலைவர்கள் வெங்கடேஷ் ஆறுமுகசேகர், ஜான் செண்பக துரை, ஃபென் மேத்யூ மற்றும் மூத்த விரிவுரையாளர்கள் சந்திரசேகர், பரிமளம், கண்ணன் ஆசிரியர்கள் சரவணன், பாலபிரபா, அகுலின் ஆய்வக போதகர்கள் குரூஸ் அம்புரோஸ், ஹைதர் அலி அலுவலக பணியாளர்கள் கல்யாணி, ரூஃபினா மற்றும் ஆறுமுகம், வசந்தா, சந்திரா, பால் துரை, குமார், பூல்பாண்டி, கேன்டீன் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர், விழா ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் கல்லூரி முதல்வர் மற்றும் முன்னாள் மாணவர்கள் குடும்பமாக வந்து சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


