» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருளையர் பிறந்தநாள் விழா

வெள்ளி 16, டிசம்பர் 2022 4:24:13 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குருளையர் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சாரண, சாரணிய இயக்கம் சார்பில் குருளையர் 106-ம் பிறந்தநாள் விழா (Wildest Birthday Ever) கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மற்றும் சாரண, சாரணிய இயக்கத்தின் மாநில துணை ஆணையர், மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணியர் பிரிவு) ஆ.ஜெயாசண்முகம் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். 

பள்ளயின் குருளையர் ஆசிரியை த.மணிமேகலை கேக் வெட்டி குருளையர் பிரிவு மாணவர்களுக்கு வாழ்த்து கூறி வழங்கினார். குருளையர்கள் பாட்டுபாடி, விளையாடி பல்லூ (பெருங்கரடி) நடனமாடி மகிழ்ந்தனர். பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் சாரண, சாரணிய இயக்கத்தின் நீலப்பறவையினரின் பொறுப்பாசிரியைகள் ரா.ச.பிரியங்கா க.சங்கர ஆவுடையாச்சி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பொறுப்பாசிரியர்கள், ஆசிரியை, மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ரா.ச.பிரியங்கா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory