» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
புதன் 14, டிசம்பர் 2022 3:54:40 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிகளுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுயதொழில் மற்றும் திறன் வளர்ப்பு மையமும் இணைந்து பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய கம்ப்யூட்டர் அறிவை பெறவும், அதன் மென்பொருட்கள் பயன்படுத்தும் திறன்களில் வளர்ச்சி பெறவும் மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 26 மாணவிகள் 10 நாள் பயிற்சியை பெற்றுள்ளனர்.
பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கும் விழா ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி முதல்வர் பாலசண்முக தேவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வ.உ.சி. கல்விக்கழக செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்கி மாணவிகளுக்கு கணிப்பொறிக் கல்வியின் அவசியம் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, சிவகாம சண்முகசுந்தரி, ஆசிரியை டெய்சி, ஜானி சோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)



ஆர்.தட்சிணாமூர்த்திDec 15, 2022 - 08:40:42 AM | Posted IP 162.1*****