» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
புதன் 14, டிசம்பர் 2022 10:52:26 AM (IST)

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வாகைக்குளம் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா ஸ்காட் குழும நிறுவனங்களின் தாளாளர் ஏ.பிரியதர்ஷினி அருண்பாபு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் அருட்தந்தை எஸ்.ரூபர்ட் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் அருளுரை ஆற்றினார்.
விழாவில் ஸ்காட் குழும நிறுவனங்களின் தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு பேசுகையில், இந்த விழா மற்றவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியான விழா. கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா. ஏழை, எளிய மக்களுக்கு கருணை உள்ளத்தோடு கொடுத்து மகிழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. அதைத்தான் கிறிஸ்துமஸ் விழா உணர்த்துகிறது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
விழாவில் ஆதரவற்ற மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள், பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிககள் நடைபெற்றன. கல்லூரி வளாகத்தில் அனைத்து துறை சார்பில் மாணவர்கள் அமைத்த கிறிஸ்துமஸ் குடில்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் கேக் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குநர் சி.அருண்பாபு, பொதுமேலாளர் கே.ஜெயக்குமார், எஸ்.கிருஷ்ணகுமார், இயக்குநர் ஜான் கென்னடி, கணினித்துறை இயக்குநர் முகமது சாதிக், இயக்குநர் ஜார்ஜ் கிளிண்டன், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், நிர்வாக அதிகாரி விக்னேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


