» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் அறுவடை திருநாள் விழா
புதன் 9, நவம்பர் 2022 12:14:10 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு திட்டத்தின் கீழ் அறுவடை திருநாள் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் கடற்சார் உயிரினவளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி தருவைக்குளத்தில் "ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு” திட்டத்தில் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட சிங்கி இறால்கள், வரி இறால்கள், பால் கெண்டை, கொடுவாமீன் மற்றும் பாறைமீன்கள் அறுவடை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் அகிலன் வரவேற்றார். நாகப்பட்டினம் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ. சுகுமார் தலைமை உரையாற்றினார்.
அவரது உரையில் பண்ணடுக்கு உணவு சார்ந்த மீன் வளர்ப்பின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஒருங்கிணைந்த கடல்கூண்டுகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ளுவதல் மீனவ சமுதாய மக்களுக்கு மாற்று வாழ்வாதரமாக அமையும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். எதிர்கால கடல் மீன் தேவையினை கடல் கூண்டுகள் மூலம் வளர்க்கப்படும் மீன்களே பூர்த்தி செய்யும் நிலை உண்டாகும் என்பதைக் குறிப்பிட்டார்.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் தி.விஜயராகவன், கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான அரசு வழங்கும் மானியங்கள் குறித்து எடுத்துரைத்தார். இவ்விழாவில் பேராசிரியர் மற்றும் தலைவர் சா.ஆதித்தன் நன்றியுரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) மற்றும் முதன்மை திட்டஅலுவலர் க.சே.விஜய் அமிர்தராஜ், இந்நிகழ்சியினை ஒருங்கிணைத்து ஏற்;பாடுகள் செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


