» சினிமா » செய்திகள்

மாலத்தீவு சுற்றுலா தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!

வியாழன் 12, ஜூன் 2025 10:34:12 AM (IST)



பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். இவர் மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுடனான ராஜதந்திர மோதலுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. மாலத்தீவுகளின் தேசிய சுற்றுலா வாரியம் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது சமூக ஊடகப் பக்கம் வெளியிட்டது. 

அதில், "எங்கள் உலகளாவிய பிராண்ட் தூதராக கத்ரீனா கைப் இருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தரும் தருணம், என அந்த நிறுவாகம் தெரிவித்துள்ளது. மாலத்தீவுகளின் உலகளாவிய பிராண்ட் தூதராக கத்ரினா கைப் நியமிக்கப்பட்டது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory