» சினிமா » செய்திகள்
மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)
நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீட்டில் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் படையப்பா அதிக திரைகளில் மறுவெளியீடானது.ரஜினியின் 75-வது பிறந்த நாளில் மறுவெளியீடானதால் சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர்.பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வெளியான இரண்டு நாள்களிலேயே ரூ. 6 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடாகியும் வசூல் வெற்றியைப் பெற்றுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

