» சினிமா » செய்திகள்

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!

திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)



மலேசியாவில் நடிகர் சிலம்பரசன், அஜித்குமாரை சந்தித்து பேசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மலேசியாவில் நடக்கும் கார் பந்தயப் போட்டிக்காக அங்கு சென்றுள்ளார். அங்குள்ள செபாங் மோட்டார் பந்தய மைதானத்தில் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் அஜித் வழிபட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. 

இந்நிலையில் அங்கு கடை திறப்பு விழாவுக்குச் சென்றுள்ள நடிகர் சிலம்பரசன், அஜித்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory