» சினிமா » செய்திகள்
அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)
அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு அரசன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. இந்நிலையில், ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, தனது கதாபாத்திரத்தை பற்றி பேசினார். அவர் பேசுகையில், "அரசன்" படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது. ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது, வெற்றிமாறன் சாருக்கு நான் நியாபகம் வந்ததாக சொன்னார். உடனே ஓகே சொல்லிட்டேன். எனக்கு எத்தனை நாட்கள் படப்பிடிப்பு இருக்கும்னு தெரியாது ’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

அடுத்து அரசியல் களம்? சினிமாவிலிருந்து விலகுகிறாரா த்ரிஷா?
வெள்ளி 20, மார்ச் 2026 10:35:50 AM (IST)

மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான்: 34 ஆண்டுகால இசைப் பயணம் முடிவுக்கு வருகிறதா?
புதன் 18, மார்ச் 2026 11:20:49 AM (IST)

சர்ச்சையான நாயுடு பேச்சு: மன்னிப்பு கோரி விளக்கமளித்தார் நடிகர் பார்த்திபன்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:10:24 PM (IST)

புடினுக்கு எதிரான ஆவணப்படத்திற்கு ஆஸ்கர்: 2026 விருது விழாவின் முக்கியத் துளிகள்!
திங்கள் 16, மார்ச் 2026 5:27:58 PM (IST)

சிறை பட வெற்றிக்குத் தமிழ் ரசிகர்களே காரணம்: இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
சனி 14, மார்ச் 2026 11:23:29 AM (IST)

