» சினிமா » செய்திகள்
விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் பெற்றுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்க்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது பாணியில் ஒரு 'பஞ்ச்' கலந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். பார்த்திபனின் வாழ்த்துச் செய்தி: "வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடரை அணைத்து, 'Happy Birthday' சொல்வதைப் போல, விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது!.
விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்... ஆனால், 'ஜெயம்' திரு. விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்குத் தமிழக மக்களே சாட்சி. அவர்கள் 108 இடங்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல், தங்களின் இதயம் என்கிற சிம்மாசனத்தில் திரு. விஜய் அவர்களை முதல்வராக அமர வைத்து அமோக ஆதரவு அளித்துள்ளனர். இந்தச் சரித்திர வெற்றியைக் கண்டுள்ள அந்த Real Hero-வை விசிலடித்துக் கொண்டாடி வாழ்த்துவோம்!"" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

