» சினிமா » செய்திகள்

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!

புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

anubamapress.jpg

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது சமீபத்திய பேட்டியில் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி குறித்தும், கடந்த 2 ஆண்டுகளாகத் தான் சந்தித்த நார்சிசிஸ்டிக் மன அழுத்த அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தனது முன்னாள் காதலரின் நடவடிக்கைகளை நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு அனுபமா பேசியதாவது: ஒரு நாள் 'ரெமோ' போல மிகவும் அன்பாகவும், மறுநாள் இரக்கமற்ற 'அந்நியன்' போலக் கொடூரமாகவும் நடந்துகொள்வார்; பிறகு தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்.

இந்தத் தொடர்ச்சியான குணமாற்றம் எனக்கு மிகப்பெரிய குழப்பத்தையும், உடல் மற்றும் மன ரீதியான துயரங்களையும் ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் சந்தித்த இந்த மன உளைச்சலே எனது கடந்தகால சமூக வலைத்தளப் பதிவுகளுக்கும் காரணம் ஆகும். இந்தக் கட்டுப்பாடான உறவினால் தனது திரைப்பயணமும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் ஆதங்கப்பட்டார்:

முன்னாள் காதலர் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், பல நல்ல பட வாய்ப்புகளைத் தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டிராகன்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூடக் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு இந்த உறவின் கட்டுப்பாடுகளே காரணம்.

மூன்று மாதங்களுக்குள்ளேயே திருமணப் பேச்சுகளைத் தொடங்கி அவர் அவசரப்படுத்தியதாகவும், ஆனால் நிலைமையை உணர்ந்து தான் திருமணத்தை நிராகரித்ததாகவும் அனுபமா கூறினார்.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் சுட்டிக்காட்டலுக்கு ஏற்ப அந்த உறவிலிருந்து விலகியதன் மூலம், தான் ஒரு 'கோல்ட் டிக்கர்' (Gold digger) அல்ல என்பதை நிரூபித்துள்ளதாகவும், சரியான நேரத்தில் எடுத்த இந்த முடிவே ஒரு மோசமான திருமண வாழ்க்கையிலிருந்து தன்னைக் காப்பாற்றியுள்ளது என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory