» சினிமா » செய்திகள்
தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!
திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

தான் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு எழுந்த சர்ச்சைகள் குறித்து, "தட்டிக்கொடுங்கள்; தட்டி விடாதீர்கள்" என நடிகர் தனுஷ் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' திரைப்படம் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியாகி ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிபெற்றாலும், விமர்சன ரீதியாகக் கலவையான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில், அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது 'ராயன்' படத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதே ஆண்டில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா', 'மெய்யழகன்' ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைக்காத நிலையில், ராயன் படத்திற்குத் தேசிய விருது வழங்கப்பட்டதற்குத் திரைத்துறையினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
தன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ், இச்சச்சை குறித்துப் பேசியதாவது: "'ராயன்' திரைப்படத்திற்குத் தேசிய விருது கிடைத்ததால் எழுந்த சர்ச்சையைக் கவனித்தேன். 'மெய்யழகன்', 'மகாராஜா' ஆகிய திரைப்படங்கள் ராயனை விடச் சிறந்த படங்கள் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், என்னுடைய 'புதுப்பேட்டை', 'ராஞ்சனா', 'மரியான்', 'வடசென்னை', 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களுக்குத் தேசிய விருது கிடைக்காதபோது இதுகுறித்து யாரும் ஆதங்கப்படவில்லை. இப்போது ராயனுக்குக் கிடைத்ததும் 90 சதவீதம் பேர் எதிராகக் கருத்து கூறுகின்றனர். ஆனால், அன்று 10 சதவீதம் கூட எனக்கு ஆதரவாகப் பேசவில்லை.
இம்முறை ராயன் படத்திற்குச் சூழ்நிலை அமைந்ததால் விருது கிடைத்திருக்கிறது, அவ்வளவுதான். தமிழ் சினிமா வளர தட்டிக்கொடுங்கள்; தட்டி விடாதீர்கள்." என்றார். தேசிய விருது சர்ச்சை குறித்து நடிகர் தனுஷ் பேசிய இந்த வீடியோவும் கருத்துகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

