» சினிமா » செய்திகள்
நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? பெரிய பாய் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அதிருப்தி!
செவ்வாய் 20, மே 2025 11:26:07 AM (IST)
நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? பெரிய பாய் என்ற புனைப்பெயர் பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், இன்று உலகளவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார். படங்களின் வெற்றிக்கு இவரது பின்னணி இசையும் பாடல்களும் முக்கிய பங்காற்றும் நிலையில், இவரை இசைப்புயல் என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இளம் ரசிகர்கள் இவரை ’பெரிய பாய்’ என்ற புனைப்பெயர் கொண்டும் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடல், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விளம்பரப் பணிகளில் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரஹ்மான் நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.
அந்த நேர்க்காணலில் ஏ.ஆர். ரஹ்மானை பெரிய பாய் என்ற புனைப்பெயருடன் தொகுப்பாளர் அழைத்தார். இதனைக் கேட்டு சிரித்த ரஹ்மான், பெரிய பாய், சின்ன பாய் என்று அழைப்பதற்கு, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? இந்த பெயர் பிடிக்கவில்லை” என்று நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த கமல்ஹாசன்: 6 முக்கியக் கோரிக்கைகளுடன் ஆலோசனை!
சனி 16, மே 2026 5:37:31 PM (IST)

என் குடும்பத்தைக் கெடுத்ததே அந்த 3 எழுத்து நடிகைதான்.. ரவி மோகன் குற்றச்சாட்டு!
சனி 16, மே 2026 4:20:22 PM (IST)

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

