» சினிமா » செய்திகள்
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா: பூஜையுடன் தொடக்கம்!
திங்கள் 19, மே 2025 3:54:51 PM (IST)

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தைத் தொடர்ந்து, வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 46-வது படமாகும். இதன் பணிகள் படப்பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் த்ரிவிக்ரம் தொடங்கிவைத்தார்.
வெங்கி அட்லுரி இயக்கவுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் ராதிகா சரத்குமார், ரவீனா தண்டன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளராக பங்கலான், எடிட்டராக நவீன் நூலி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பிறந்தநாளில் ஜன நாயகன் அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெள்ளி 20, ஜூன் 2025 8:28:02 PM (IST)

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 11:02:22 AM (IST)

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்பனை
புதன் 18, ஜூன் 2025 4:29:29 PM (IST)

நெல் ஜெயராமனின் மகன் படிப்பு செலவை ஏற்றுள்ள சிவகார்த்திகேயன்..!
புதன் 18, ஜூன் 2025 3:43:56 PM (IST)

இரண்டாவது திருமணம் செய்து மோசடி: பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்!
திங்கள் 16, ஜூன் 2025 5:44:50 PM (IST)

ரஜினிக்காக கூலி படத்தில் நடித்தேன்: அமீர் கான்
வியாழன் 12, ஜூன் 2025 12:45:08 PM (IST)
