» சினிமா » செய்திகள்
வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)

வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகள் துவங்கி விட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல். படத்தை கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.
இது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறும் போது, படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து வந்தார். இந்நிலையில், வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், வாடிவாசல் பாடல் இசையமைக்கும் பணிகள் தொடங்கின என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவை டேக் செய்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறனுடன் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜயின் ஜனநாயகன் தாமதம் : திரையரங்குகளுக்கு ரூ.100 கோடி நஷ்டம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:05:48 PM (IST)

தனுஷ் உடன் திருமணமா? - மிருணாள் தாக்கூர் விளக்கம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 4:59:31 PM (IST)

திரைக்கே வராத ரீமேக் திரைப்படத்திற்கு தமிழக அரசின் 3 விருதுகள் அறிவிப்பால் சர்ச்சை!
திங்கள் 2, பிப்ரவரி 2026 12:25:51 PM (IST)

ஜெய் பீம் திரைப்படத்திற்கு தமிழக அரசின் 7 விருதுகள் அறிவிப்பு: இயக்குநர் த.செ.ஞானவேல் நன்றி!
சனி 31, ஜனவரி 2026 5:45:27 PM (IST)

ராஜமௌலியின் வாரணாசி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:21:22 PM (IST)

தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:24:05 PM (IST)

