» சினிமா » செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!

வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)



இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான "பறந்து போ’ திரைப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் ’பறந்து போ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நடிகை அஞ்சலி, கும்பலங்கி நைட்ஸ் திரைப்பட நடிகை கிரேஸ் ஆண்டனி, நடிகர் அஜு வர்கீஸ், பாடகர் விஜய் ஜேசுதாஸ் மற்றும் மாஸ்டர் மிதூல் ரயான் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தற்போது நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.

முன்னதாக, இயக்குநர் ராமின் பேரன்பு மற்றும் வருகின்ற மார்ச் மாதம் வெளியாகவுள்ள ஏழு கடல் ஏழு மலை ஆகிய திரைப்படங்கள் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



CSC Computer Education



Thoothukudi Business Directory