» சினிமா » செய்திகள்

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்!

வியாழன் 26, டிசம்பர் 2024 12:22:25 PM (IST)



உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 7.5 - 6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றாா். இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளா் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்திருக்கிறாா். மேலும், இந்தப் போட்டியில் வாகை சூடிய 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளாா்.

குகேஷுக்கு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசில் தலைவா்களும், பல்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், குகேஷை தனது வீட்டுக்கு அழைத்து நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். மேலும், குகேஷுக்கு பொன்னாடை போர்த்தி பரிசாக புத்தகம் வழங்கியுள்ளார். அதேபோல், சிவகார்த்திகேயனும் குகேஷை தனது வீட்டுக்கு அழைத்து வாழ்த்தியுள்ளார். குகேஷுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன், பரிசாக கைக்கடிகாரத்தை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory