» சினிமா » செய்திகள்
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் காட்சிகள் நிறைவு: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
ஞாயிறு 15, டிசம்பர் 2024 8:52:00 PM (IST)

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்..
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் அஜித். அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "எனக்கு வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. எனது கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுடன் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அஜித் மிகவும் ஒல்லியாக இருப்பதால், அப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத்தும், பின்னணி இசைக்கு ஜி.வி.பிரகாஷும் பணிபுரிந்து வருகிறார்கள். ‘குட் பேட் அக்லி’ பணிகள் முடிவடைந்துவிட்டதால், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள உள்ளார் அஜித்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

