» சினிமா » செய்திகள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம்!

வெள்ளி 13, டிசம்பர் 2024 5:06:39 PM (IST)



இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63ஆவது படத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார். தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றதுடன் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

இந்நிலையில் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நடிகர் விக்ரமை வைத்து மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்குகிறார். இதனை போஸ்டர் வெளியிட்டு சாந்தி டாக்கீஸ், " இந்த நாட்டின் சிறந்த நடிகருடன் எங்களது 3ஆவது தயாரிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். திரைப் பயணத்தில் மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுத்தவரும் பாதையை மாற்றும் படங்களைக் கொடுத்த நடிகருடன் இணைவது கௌரவமாக கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory