» சினிமா » செய்திகள்

கைதானதாக போலி வீடியோவை வெளியிட்ட கவர்ச்சி நடிகை மீது வழக்குப்பதிவு

ஞாயிறு 5, நவம்பர் 2023 10:34:33 AM (IST)கைதானதாக போலி வீடியோவை வெளியிட்ட நடிகை ஊர்பி ஜாவேத் மீது 4 பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பாலிவுட் டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர், ஊர்பி ஜாவேத். படவாய்ப்புகள் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக வாழைத்தோல், பிளாஸ்டிக் டப்பா, சிகரெட் பஞ்சு போன்ற விசித்திரமான பொருட்களை ஆடையாக அணிந்து கவர்ச்சி விருந்து படைத்து கவனம் ஈர்த்து வருகிறார். இதற்காகவே சமூக வலைதளங்களில் இவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.இந்தநிலையில் பொது இடத்தில் ஆபாசமாக உடையணிந்த ஊர்பி ஜாவேத்தை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் செல்வது போன்ற புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த வீடியோ உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஊர்பி ஜாவேத் மீது உண்மையான போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சொந்த நோக்கத்துக்காக காவல்துறையின் சின்னத்தையும், சீருடையையும் தவறாக பயன்படுத்தியதாகவும், பொதுமக்களிடம் தவறான சிந்தனையை விதைத்ததற்காகவும் ஊர்பி ஜாவேத் மீது 4 பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory