» சினிமா » செய்திகள்
நடிகை கவுதமியிடம் சொத்து மோசடி செய்தவர் கைது!
சனி 4, நவம்பர் 2023 10:16:58 AM (IST)
நடிகை கவுதமியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்துவிடடு தனக்கு வெறும் ரூ.4.10 கோடி கொடுத்து ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.