» சினிமா » செய்திகள்

ஜெய்பீம்’ 2 ஆண்டுகள் நிறைவு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

வெள்ளி 3, நவம்பர் 2023 12:54:47 PM (IST)ஜெய்பீம்’ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி கொடுத்துள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான குறிப்பை பகிர்ந்து நடிகர் சூர்யா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு இதே நாளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஞானவேல் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்திருந்தனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இருளர் மக்கள் மீதான அதிகார அத்துமீறலைப் பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெய்பீம் படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.இந்தப் பதிவை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் ஞானவேல், "உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்..அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி கரம்.” என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory