» சினிமா » செய்திகள்
கமல்ஹாசன் - மணிரத்னம் படப் பணிகள் துவக்கம்!
வெள்ளி 27, அக்டோபர் 2023 3:58:03 PM (IST)

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘KH234’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.
அதேநாளில் கமல்ஹாசன் - மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘‘KH234’ படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளியாக உள்ளது. இதற்கான வீடியோ சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
The dream awaits.✨
— Red Giant Movies (@RedGiantMovies_) October 27, 2023
The beginning of #KH234 🥁💥#Ulaganayagan#KamalHaasan
#CelebrationBeginsNov7
#HBDUlaganayagan@ikamalhaasan#ManiRatnam@arrahman#Mahendran@bagapath@MShenbagamoort3@RKFI@MadrasTalkies_@RedGiantMovies_@turmericmediaTM@dop007@sreekar_prasad… pic.twitter.com/tRXjUk202o
இந்நிலையில், இது தொடர்பாக படக்குழு "Begin the Begin” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 1987-ம் ஆண்டில் வெளியான ‘நாயகன்’ படத்தின் காட்சி ஒன்று காட்டப்படுகிறது. பின்பு 2023 என குறிப்பிட்டு கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகர் பிரசாத், ரவி கே சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். இதன்மூலம் படப் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

