» சினிமா » செய்திகள்
இளம் வயதினருக்கு மாரடைப்பு.. கமல்ஹாசன் அறிவுரை!
செவ்வாய் 24, அக்டோபர் 2023 4:32:11 PM (IST)
மாரடைப்பு ஏற்படுவது தாெடர்பாக இளம் வயதினருக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.
நடிகர் கமல்ஹாசன் இயக்குநர்கள் வினோத், மணிரத்னம் ஆகியோர் படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘சமீப காலமாக இளம் வயதைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. 30 - 40 வயதுகளில் இப்பிரச்னை வருவது வியப்பாக இருக்கிறது. இதுகுறித்து என் மருத்துவ நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் இதற்கு மூன்று காரணங்களைக் கூறினர். உறக்கமின்மை, உணவுப் பழக்கம், செயலாற்றாமல் இருப்பது. இந்த 3 காரணங்களாலே பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுகிறது. தூக்கத்திற்கும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. உணவே மருந்தாக இருக்க வேண்டும். மருந்து உணவாக இருக்கக் கூடாது. உடல் செயல்பாட்டுகளை நாம் செய்வதில்லை. அசையாமல் உருளைக் கிழங்குகளைப் போல் இருக்கிறோம். கிரிக்கெட் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் விளையாடுவதிலும் இருக்க வேண்டும். ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. இளைஞர்கள் இதை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.” என அறிவுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

