» சினிமா » செய்திகள்
நவ.7ல் கமல்- மணிரத்னம் படத்தின் அப்டேட்!
புதன் 18, அக்டோபர் 2023 10:47:56 AM (IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் முதல் பார்வை வீடியோ வரும் நவ.7ம் தேதி வெளியாக உள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலின் 234வது படம் குறித்து, "நாயகனை மிஞ்சும் ஒரு படத்தில்தான் நாங்கள் இணைய இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம்” எனக் கமல்ஹாசன் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் முதல் பார்வைக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் கமலின் பிறந்தநாளான நவ.7இல் அறிமுக விடியோவினை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்குப் பிறகு ரவி கே. சந்திரன் 3வது முறையாக மணிரத்னமுடன் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

