» சினிமா » செய்திகள்
ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல: முதல் முறையாக கணவர் விளக்கம்!
புதன் 4, அக்டோபர் 2023 11:51:01 AM (IST)
ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல என்று கணவர் போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய திரையுலகில் கனவு கன்னியாக கொடி கட்டிப்பறந்த நடிகை ஸ்ரீதேவி, 2018-ல் துபாயில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது சாவில் ரசிகர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இப்போதுவரை இருக்கிறது. கணவர் போனிகபூரையும் சந்தேகித்தனர்.இந்த நிலையில் ஸ்ரீதேவி மரணத்தின் பின்னணி உண்மைகள் குறித்து போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "திரையில் அழகாக காட்சியளிக்க ஸ்ரீதேவி கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருப்பார். உப்பு இல்லாத உணவையே சாப்பிட்டு வந்தார். இதனால் பலமுறை சோர்வடைந்து தலை சுற்றலுடன் கீழே விழுந்து இருக்கிறார்.
ரத்த அழுத்தம் குறைவு பிரச்சினையும் இருந்தது. டாக்டர்கள் எச்சரித்தும் அதை சீரியசாக அவர் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஸ்ரீதேவி இயற்கையாக மரணம் அடையவில்லை. தவறி விழுந்துதான் இறந்தார். அந்த நேரத்தில் துபாய் போலீசார் என்னை ஒரு நாள் முழுவதும் விசாரித்தார்கள். எனக்கு உண்மை கண்டறியும் சோதனையும் செய்தார்கள். இறுதியில் குளியல் தொட்டியில் தவறி விழுந்துதான் இறந்தார் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஸ்ரீதேவி இறந்த சில நாட்களுக்கு பிறகு நடிகர் நாகார்ஜூனா என்னை சந்தித்தார். ஒருமுறை அவரோடு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தபோது கடுமையான உணவு கட்டுப்பாடு இருந்து படப்பிடிப்பில் சுய நினைவிழந்து கீழே விழுந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்'' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

