» சினிமா » செய்திகள்
விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ்!
சனி 23, செப்டம்பர் 2023 12:11:10 PM (IST)

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவ.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. கடந்த சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 24ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இதுவரை இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. கதையில் மாற்றம் செய்திருப்பதால் அவர் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் படக்குழுவோ, ஐஸ்வர்யா ராஜேஷோ இது தொடர்பாக வாய்திறக்கவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீரியல் நடிகையை கரம்பிடித்தார் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி!
திங்கள் 11, டிசம்பர் 2023 11:37:20 AM (IST)

மிக்ஜம் நிவாரணப் பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிதி!
திங்கள் 11, டிசம்பர் 2023 10:29:46 AM (IST)

லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள்: நயன்தாரா வேண்டுகோள்!
சனி 9, டிசம்பர் 2023 5:32:55 PM (IST)

இணையதளத்தில் சிவகார்த்திகேயன் படக்காட்சி கசிந்தது
வியாழன் 7, டிசம்பர் 2023 8:17:29 PM (IST)

தவறான நிர்வாகமே வெள்ள பாதிப்புக்கு காரணம்: சந்தோஷ் நாராயணன் கருத்து!
புதன் 6, டிசம்பர் 2023 5:46:06 PM (IST)

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)
