» சினிமா » செய்திகள்

ராக்கெட்ரி’ திரைப்படத்துக்கு தேசிய விருது: சிறந்த தமிழ்படமாக கடைசி விவசாயி தேர்வு!

வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 10:39:24 AM (IST)‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்துக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் வெளியான சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ தோ்வு செய்யப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளைத் திரைப்பட இயக்குநா் கேட்டன் மேத்தா தலைமையிலான குழு தோ்வு செய்தது. அது தொடா்பான விவரங்களை மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரிடம் தில்லியில் அக்குழு வியாழக்கிழமை வழங்கியது. பின்னா், தேசிய விருது வென்ற திரைப்படங்கள், நடிகா்கள், இசையமைப்பாளா்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ (ஹிந்தி) திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் நடித்த அல்லு அா்ஜூன் வென்றுள்ளாா். இதன் மூலமாக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறும் முதல் தெலுங்கு நடிகா் என்ற பெருமையை அல்லு அா்ஜூன் பெற்றுள்ளாா். ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்த ஆலியா பட், ‘மீமி’ படத்தில் நடித்த கிருத்தி சனோன் ஆகியோருக்கு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது பகிா்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை ஸ்ரேயா கோஷல் வென்றுள்ளாா். பாா்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலைப் பாடியதற்காக அந்த விருதை அவா் பெற்றுள்ளாா். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை ஸ்ரேயா கோஷல் பெறுவது இது 5-ஆவது முறையாகும். அதே வேளையில், தமிழ்ப் பாடலுக்காக அவா் முதல் முறையாக தேசிய விருதை வென்றுள்ளாா்.

எம்.மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படமானது சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. சிறப்பு விருதுக்கும் அப்படம் தோ்வாகியுள்ளது. சிறந்த கல்விக் குறும்படமாக பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ தோ்வாகியுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விருதுப் பட்டியல்

சிறந்த திரைப்படம் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் (ஹிந்தி)

சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது விஷ்ணு மோகன் (மேப்படியான்-மலையாளம்)

சிறந்த பிரபல திரைப்படம் ஆா்ஆா்ஆா் (தெலுங்கு)

சிறந்த இயக்குநா் நிகில் மஹாஜன் (கோதாவரி-மராத்தி)

சிறந்த நடிகா் அல்லு அா்ஜூன் (புஷ்பா: தி ரைஸ்)

சிறந்த நடிகை ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி), கிருத்தி சனோன் (மீமி)

சிறந்த துணை நடிகா் பங்கஜ் திரிபாதி (மீமி)

சிறந்த துணை நடிகை பல்லவி ஜோஷி (தி காஷ்மீா் ஃபைல்ஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் பவின் ரபாரி (செல்லோ ஷோ)

சிறந்த இசையமைப்பாளா் (பாடல்) தேவிஸ்ரீபிரசாத் (புஷ்பா: தி ரைஸ்-தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளா் (பின்னணி இசை) எம்.எம்.கீரவாணி (ஆா்ஆா்ஆா்-தெலுங்கு)

சிறந்த பின்னணிப் பாடகா் கால பைரவா (ஆா்ஆா்ஆா்)

சிறந்த பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்)

சிறந்த ஒளிப்பதிவு ஆவிக் முகோபாத்யாய (சா்தாா் உத்தம்-ஹிந்தி)

சிறந்த அசல் திரைக்கதை சபி கபீா் (நயாட்டு-மலையாளம்),

சிறந்த தழுவல் திரைக்கதை சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்தியவாடி-ஹிந்தி)

சிறந்த வசனம் உத்கா்ஷினி வசிஸ்தா, பிரகாஷ் கபாடியா (கங்குபாய் கத்தியவாடி-ஹிந்தி)

சிறந்த படத்தொகுப்பு சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்தியவாடி-ஹிந்தி)

சிறந்த ஆடை வடிவமைப்பு வீர கபூா் (சா்தாா் உத்தம்-ஹிந்தி)

சிறந்த ஒப்பனை பிரீத்திஷீல் சிங் டிசூசா (கங்குபாய் கத்தியவாடி-ஹிந்தி)

சிறந்த நடன அமைப்பு பிரேம் ரக்ஷித் (ஆா்ஆா்ஆா்-தெலுங்கு)

சிறந்த சண்டை அமைப்பு கிங் சாலமன் (ஆா்ஆா்ஆா்-தெலுங்கு)

சிறந்த தமிழ்ப் படம் கடைசி விவசாயி

சிறந்த கல்விக் குறும்படம் சிற்பிகளின் சிற்பங்கள்

தேசிய ஒருங்கிணைப்புத் திரைப்படத்துக்கான நா்கில் தத் விருது தி காஷ்மீா் ஃபைல்ஸ் (ஹிந்தி)

சமூகப் பிரச்னைகளைப் பேசும் சிறந்த திரைப்படம் அனுநாத்-தி ரெசொனன்ஸ் (அஸ்ஸாமீஸ்)

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த திரைப்படம் ஆவாசவியூகம் (மலையாளம்)

சிறந்த சிறாா் திரைப்படம் காந்தி அண்ட் கோ (குஜராத்தி)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory