» சினிமா » செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: ரஜினி, கமல் வாழ்த்து!!

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 10:57:44 AM (IST)"இந்தியா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது” என சந்திரயான்-3 வெற்றி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயானை தரையிறக்கியதன் மூலம் நமது தேசம் அதன் பெருமையை அடையாளப்படுத்துகிறது. இஸ்ரோவுக்கு எனது இதயம் கனித்த வாழ்த்துகள். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் 

"நிலவில் இந்தியர்கள் கால் பதித்து நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "செயற்கைகோளின் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது தொடங்கி நிலவில் தரையிறங்கியது வரை என்ன ஒரு நெடும் பயணம்! இஸ்ரோ குழு இந்தியாவையே பெருமைபடுத்தியுள்ளது. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். நிலவில் இந்தியர்கள் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory