» சினிமா » செய்திகள்

பிரபல நடிகர் 25 வயதில் மாரடைப்பால் மரணம்!

சனி 19, ஆகஸ்ட் 2023 4:48:16 PM (IST)

தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகர் பவன் சிங் என்பவர் தனது 25 வயதில் மாரடைப்பால் காலமானார். 

தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகர் பவன் சிங். இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 25 வயதே ஆகும் இவர், இந்தியில் சில தொடர்களில் நடித்து வந்ததால், மும்பையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் பவன் சிங் உடலை அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். சொந்த ஊரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. சமீபத்தில், சின்னத்திரை நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர்(30) மாரடைப்பால் மரணமடைந்தார். தொடர்து கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory