» சினிமா » செய்திகள்
அஜித்துனா யாருன்னு கேட்ட துரைமுருகன்.. கருணாநிதியை டார்கெட் செய்யும் ரசிகர்கள்!
புதன் 16, ஆகஸ்ட் 2023 5:33:28 PM (IST)

அஜித்னா யாரு என்று துரைமுருகன் கேட்டுள்ள நிலையில், கலைஞர் மற்றும் திமுகவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அஜித் பற்றி திமுக அமைச்சர் துரைமுருகனிடம் தொகுப்பாளர் கேட்க, அஜித்துன்னா யாரு என துரைமுருகன் பேசியதை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
உடனடியாக பொங்கி எழுந்த அஜித் ஆர்மி #ஐயோஅம்மா_கொல்றாங்க ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து கருணாநிதியையே டார்கெட் செய்து அஜித் என்றால் யாருன்னு இப்போ புரியும் உங்களுக்கு என வச்சு செய்து வருகின்றனர்.அந்த ஹாஷ்டேக்கில் துரைமுருகனையும் கருணாநிதியையும் ட்ரோல் செய்து ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ மீம்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
திமுக அமைச்சர் துரைமுருகனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் மீடியா ஒன்றில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில், தொகுப்பாளர் விஜய், அஜித் படங்களை பார்த்துருக்கீங்களா என கேள்வி எழுப்ப, தெளிவாக தெரியாதது போல அஜித்துன்னா யாரு? என துரைமுருகன் கேட்கும் அந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவே தீப்பிடித்து எரிய காரணம் என்கின்றனர்.
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என முதலமைச்சராக இருக்கும் போது கருணாநிதி நடத்திய விழாவில் கலந்துக் கொண்டு, நடிகர்களை இப்படி விழாக்களுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாம் என அஜித் பேச அதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிய வீடியோவையும் ஷேர் செய்து இதுதான் எங்கள் அஜித் என்றும் அமைதியா இருக்கிறவங்கள சீண்டிப் பார்க்காதீங்க, அப்புறம் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் திமுகவினரை எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படப்பிடிப்பு நிறைவு: படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:23:59 PM (IST)

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
திங்கள் 17, மார்ச் 2025 11:56:58 AM (IST)

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)
