» சினிமா » செய்திகள்
தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் ரஜினிகாந்த் என்ன செய்தார்? மன்சூர் அலிகான் கேள்வி..!
புதன் 16, ஆகஸ்ட் 2023 5:28:43 PM (IST)
"ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருந்த போதிலும், தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்" என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டராகவும், ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினி மீது தான் கோபமாக இருப்பதாக பேசி இருக்கிறார்.
அதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரம் தான். ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோவாகவும் சூப்பர் ஸ்டார்வும் இருக்கிறார் என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. நிஜத்திலும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்வார் என்று நினைத்தேன்
ஆனால் நான் நினைச்சது எதுவுமே நடக்கல என்பதுதான் எனக்கு கோபம். கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தவர்தான் புனித் ராஜ்குமார். இவர் சமீபத்தில் தான் இறந்துவிட்டார். ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை மறக்கவில்லை. அவர் மீது அதிகமாக பாசமாகவும் நன்றியோடும் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்களுக்கு செய்த உதவிகள் தான்.
புனித் ராஜ்குமார் செய்த உதவியால்தான் அவரை மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. நான் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் நடித்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர். ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோ நிஜத்தில் அல்ல. படத்தில் அவர் இடது சாரியாக நடித்துக் கொண்டு இருந்தாலும் நிஜத்தில் வலது சரியாக தான் இருக்கிறார். அதனால் தான் எனக்கு பிரச்சனை என்று அந்த பேட்டியில் மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார்.
saamiAug 18, 2023 - 04:22:48 PM | Posted IP 172.7*****