» சினிமா » செய்திகள்

சினிமாவில் கமல்ஹாசன் 64வது ஆண்டு: குவியும் வாழ்த்துகள்!

சனி 12, ஆகஸ்ட் 2023 4:57:28 PM (IST)சினிமாவில் கமலுக்கு 64வது ஆண்டு தொடங்குகிறது. இதனையொட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், பாடகர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர் என எந்தத் துறை எடுத்தாலும் அதில் கில்லாடியாக பணியாற்றும் திறமைசாலி. தமிழ் சினிமாவில் பல வகையான புதிய டெக்னிக்கலான விசயங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். படங்கள் வசூலில் பிர்ச்னை ஏற்பட்டாலும் தனது சோதனை முயற்சியை கைவிடுவதே இல்லை. ஓடிடி வருவதையும் முன்னமே கணித்த என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமல்தான்.

மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பதம் ஸ்ரீ, பத்ம விபுஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து அங்ஜேயும் தனித்து மிளிர்ந்தவர் கமல்ஹாசன். 

லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்தியன் 2 , கல்கி 2898 படத்திலும் நடித்து வருகிறார். கமல் 233வது படத்தினை எச்.வினோத்தும் கமல் 234 படத்தினை மணிரத்னமும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலின் பல படங்களின் கதாபாத்திரங்கள் அடங்கிய போஸ்ட்ரை பகிர்ந்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். 

இது குறித்து நடிகர் கமல், "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக” என கமல் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory