» சினிமா » செய்திகள்

ஜெயிலர் வெற்றி: ரசிகர்களுக்கு ஷிவ ராஜ்குமார் நன்றி!

சனி 12, ஆகஸ்ட் 2023 12:08:43 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அதிகாலைக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. "யாரு இவரு? வந்த கொஞ்ச சீன்லயும் மாஸா இருக்காறே!.. தனியாக ஒரு படமே நடிக்கலாம்” என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பாராட்டுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் விதமாக விடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ஷிவ ராஜ்குமார். தான் வெளியிட்ட விடியோவில், "ஜெயிலர் நன்றாக ஓடிக்கொண்டுள்ளது. ரசிகர்களுக்கு மிக்க நன்றி. வாய்ப்பளித்த நெல்சன், ரஜினி சாருக்கும் நன்றிகள். உங்களின் அன்பினை எப்போதும் நெஞ்சில் வைத்திருப்பேன்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து

RajaAug 14, 2023 - 03:16:34 PM | Posted IP 172.7*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory