» சினிமா » செய்திகள்

கிராஃபிக் டிசைனரை கரம்பிடித்தார் கே.பி.ஓய். தீனா!!

வியாழன் 1, ஜூன் 2023 5:14:18 PM (IST)கைதி படத்தில் நடித்த நடிகர் தீனாவிற்கு பட்டுக்கோட்டையில் இன்று திருமணம் நடைபெற்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. முதலில் அந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் அந்நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றார். கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனா, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். தொடர்ந்து, சின்னத் திரையில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த பா பாண்டி படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். பின்னர் தும்பா, கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்நிலையில், தீனாவிற்கு இன்று  திருமணம் நடைபெற்றது. இதன் தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். 

பட்டுக்கோட்டையை சேர்ந்த கிராஃபிக் டிசைனர் பிரகதியை இவர் திருமணம் செய்துள்ளார். இவர் சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று திருமணம் நடைபெற்றது. வரும் ஜூன் 10 ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory