» சினிமா » செய்திகள்

பிரபுதேவாவின் புதிய படம் டைட்டில் அறிவிப்பு!

வியாழன் 1, ஜூன் 2023 12:05:17 PM (IST)நடிகர் பிரபு தேவாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடன இயக்குநராக இருந்து நடிகராக,  இயக்குநராக என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் ‘பேட்ட ராப்’ என்கிற புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்க உள்ளார். இதுகுறித்து அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. புளூ ஹில் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை - டி.இமான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory