» சினிமா » செய்திகள்

படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்

வியாழன் 1, ஜூன் 2023 12:03:00 PM (IST)

இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்

சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியுள்ளது. 

அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து ஏற்படமால் படக்குழுவினர் தப்பியுள்ளனர். இதுகுறித்து சுசீந்திரன், ‘மார்கழி திங்கள் படப்பிடிப்பில் இடி மின்னலுடன் பயங்கர மழை பெய்தது. படப்பிடிப்புகாக கட்டப்பட்டிருந்த லைட்டுகள் கீழே விழுந்து நொறுங்கின. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்' எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory