» சினிமா » செய்திகள்

சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசன், மாதவனுக்கு விருது!!

செவ்வாய் 30, மே 2023 12:54:59 PM (IST)சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நடிகர் மாதவன் சிறந்த டைரக்டருக்கான விருதை பெற்றார். அவர் டைரக்டு செய்து நடித்த ராக்கெட்டரி படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கி இருந்தார்.

உளவு பார்த்ததாக போலி குற்றச்சாட்டில் சிக்கி சிறை தண்டனை மற்றும் சித்ரவதையை அனுபவித்த நேர்மையான விஞ்ஞானியின் வாழ்க்கை சம்பவங்களை இந்த படத்தில் மாதவன் பதிவு செய்து இருந்தார். இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். படத்தை மாதவனே தயாரித்தும் இருந்தார்.  தற்போது ராக்கெட்டரி படத்துக்காக சிறந்த டைரக்டர் விருது பெற்றுள்ள நிலையில் மாதவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்து ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையிலும் மாதவன் நடிக்க இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory