» சினிமா » செய்திகள்
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதாகர்
சனி 27, மே 2023 3:41:24 PM (IST)
"நான் தற்போது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சுதாகர்.
தமிழில் கிழக்கே போகும் ரயில் படம் மூலம் பிரபலமான நடிகர் சுதாகர், தெலுங்கிலும் கதாநாயகனாக நடித்து தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் இவர் மரணம் அடைந்து விட்டதாக கூறி சோசியல் மீடியாவில் சில செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சுதாகர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "கடந்த சில நாட்களாக என்னை பற்றி வெளியாகும் செய்திகள் எதுவும் உண்மை அல்ல. அதுபோன்ற பொய்யான செய்திகளை நம்பாதீர்கள். மேலும் தயவுசெய்து அதை பரப்பவும் செய்யாதீர்கள். நான் தற்போது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.