» சினிமா » செய்திகள்

60-வது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி!!

வெள்ளி 26, மே 2023 3:52:17 PM (IST)பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் தமிழில் தில், கில்லி உட்பட தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி, தமிழில் பெரும்பாலும் வில்லன் நடிகராக அறியப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த 1962-ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் தனது சினிமா பயணத்தை 1986-ம் ஆண்டு தொடங்கினார். இதுவரை இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஒடியா, மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட 11 மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 

தேசிய விருது பெற்ற நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ரஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்திருந்தார்.  இந்நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் எளிய முறையில் வியாழக்கிழமை உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணமாக நடந்தது.

தனது 60-வது வயதில் இரண்டாவதாக திருமணம் குறித்து வித்யார்த்தி கூறும்போது, "எனது வாழ்வின் இந்த நிலையில் ரூபாலியை திருமணம் செய்திருப்பது அசாதரணமான உணர்வினைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அதனைத் தொடர்ந்து விருந்து நிகழ்வு நடந்தது” என்றார். 

தொடர்ந்து தனது ரசிகர்களுக்கான செய்தியாக, "சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட நாங்கள் இருவரும், எங்கள் உறவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினோம். ஆனாலும் எங்களின் திருமணம் சிறிய குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்" என்று தெரிவித்துள்ளார். ரூபாலி தொழில்முனைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory