» சினிமா » செய்திகள்

அயலான் vs ஜப்பான்: சிவகார்த்திகேயனுடன் மீண்டும் மோதும் கார்த்தி!

வியாழன் 25, மே 2023 3:22:50 PM (IST)சிவகார்த்திகேயனின் அயலானும், கார்த்தியின் ஜப்பானும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மூன்று ஆண்டுகளான நிலையில், கிராபிக்ஸ் பணி காரணமாக வெளியிடுவதில் தாமதம் நீடித்து வந்தது. அனைத்து பணிகளும் முடிவடையும் சூழலில் இருப்பதால், அயலான் படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று கடந்த மாதம் படக்குழு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜ்முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்தாண்டு தீபாவளி அன்று கார்த்தியின் சர்தார் படமும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் மோதிக் கொண்டது. இதில், பிரின்ஸ் படத்தைவிட சர்தார் படத்துக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்தாண்டு தீபாவளிக்கும் கார்த்தி, சிவகார்த்திகேயனின் படங்கள் மோதவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory