» சினிமா » செய்திகள்
ஹாலிவுட் விருது வென்ற ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’
சனி 25, பிப்ரவரி 2023 3:54:35 PM (IST)

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு ‘ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ விருது கிடைத்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடி வசூலை குவித்தது. அண்மையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு..’ பாடலுக்காக ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ’கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது.
மேலும், ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது’ விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல் ஆகியவற்றுக்கான விருதுகளை பெற்றது. இந்நிலையில், தற்போது ‘ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ விருது விழாவில் 4 பிரிவுகளின் கீழ் ‘ஆர்ஆர்ஆர்’ படம் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற விருது விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த சண்டைக் காட்சி மற்றும் சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வாங்கிக் குவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்
சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)

பராசக்தி டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது - நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை
வெள்ளி 31, ஜனவரி 2025 11:31:50 AM (IST)
