» சினிமா » செய்திகள்
ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர் : மாளவிகா மோகனன்
ஞாயிறு 12, பிப்ரவரி 2023 8:29:55 AM (IST)

ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது பிடிக்காது என்று மாளவிகா மோகனன் கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாள ஊடகம் ஒன்றுக்கு மாளவிகா அளித்த பேட்டி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த பேட்டியில் மாளவிகா லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பற்றி பேசினார். ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். ஹீரோக்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது போல் ஹீரோயின்களையும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டும் என்று மாளவிகா கூறினார்.
கத்ரீனா கைப், ஆலியா பட், தீபிகா படுகோனே ஆகியோர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று மாளவிகா கூறினார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மீது பொறாமை கொண்டதால் மாளவிகா மோகனன் இப்படி பேசுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர். நயன்தாராவும், மஞ்சு வாரியரும் மட்டுமே சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்கள். நயன்தாராவை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் பொறாமையா என்று கேட்கிறார்கள்.
முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில் நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நயன்தாரா மேக்கப் போட்டது குறித்தும், படத்தில் இறக்கும் போது இப்படி இருப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. . இதற்கு நயன்தாராவும் 'கனெக்ட்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது பதிலளித்துள்ளார். அதற்கு பதிலளித்த நயன்தாரா இது கமர்ஷியல் படம் என்றும், இயக்குனரின் விருப்பப்படி தான் நடிக்க முடியும் என்றும் கூறி இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

