» சினிமா » செய்திகள்
கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம்!
வெள்ளி 10, பிப்ரவரி 2023 12:14:43 PM (IST)

இளையராஜா இசையில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘யார் இந்த பேய்கள்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். "யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும்.
வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும் வேதனைகளையும் அடிப்படையாக கொண்டு இந்த விழிப்புணர்வு மியூசிக் வீடியோ வெளிவந்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழந்தைகளின் துயரங்கள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். ஒரு குழந்தையின் அப்பாவித்தனம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பாலியல் குற்றவாளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட இந்தப் பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
இவர்கள்களேFeb 11, 2023 - 11:20:08 AM | Posted IP 162.1*****
எல்லாம் பிராடு குடும்பம்
8056708113Feb 10, 2023 - 12:59:46 PM | Posted IP 106.1*****
யார்டா இப்ப வாங்க.டா சின்ன பசங்களா., இவங்க மகன் குறித்து வதந்தி பரப்பியது......அந்த நபரை 24 மணி நேரத்தில் கண்டுபிடிப்போம்....! வாத்தி கம்மிங்....!
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)


Reporters ஜாக்கிரதைFeb 12, 2023 - 05:12:26 AM | Posted IP 106.1*****