» சினிமா » செய்திகள்
பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நயன்தாரா அறிவுரை
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:30:37 PM (IST)
பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது செலவழியுங்கள் என மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை வழங்கியுள்ளார்.
நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது அவர் கூறியதாவது: கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியானது. இந்த நேரத்தில் யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது. நீங்கள் நல்ல நண்பர்களைத் தேர்வுசெய்து பழக வேண்டும். கெட்ட நண்பர்களோடு சேர்ந்தால், வாழ்க்கை மாறிவிடும். கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர் காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள். கல்லூரி முடிந்து வெற்றியடைந்த நபராக, திறமையானவராக மாறினாலும் பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கலாம், அதே நேரம் உங்கள் பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது செலவழியுங்கள். அதில் தான் அவர்களின் மகிழ்ச்சி இருக்கிறது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

