» சினிமா » செய்திகள்
ஒழுங்கா போய் வேலைய பாரு..' ரசிகருக்கு அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!
புதன் 1, பிப்ரவரி 2023 5:32:12 PM (IST)
தலைவா, தலைவா என்று கூறி பின்தொடர்ந்து வந்த ரசிகரிடம், ஒழுங்கா வேலையை பாரு என நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ந் தேதி 'ஜெயிலர்' படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 60 சதவீத அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7ந் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் விமானம் மூலம் 15ந் தேதி சென்னை திரும்பினார். இந்நிலையில் நேபாளத்தில் நடக்க உள்ள படப்பிடிப்புக்காக டெல்லி வழியாக செல்ல நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் இன்று வந்தார். அப்போது ஒரு ரசிகர் தலைவா வணக்கம் என்றார். உடனே ரஜினிகாந்த் ஒழுங்கா வேலையை பாரு என சொல்லும் வகையில் சைகை காட்டி சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

