» சினிமா » செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ரஜினி திடீர் சந்திப்பு!

செவ்வாய் 10, ஜனவரி 2023 12:21:19 PM (IST)



ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு,உட்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு நேற்று சென்றார். அவரை  சந்திரபாபு நாயுடு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் ஜெயிலர் திரைப்பட படப்பிடிப்பு குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டறிந்ததாகவும், ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory